கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;- “ இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 12% குணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் சதவிகிதம் 3 ஆக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரப்பில் கூறப்பட்டதாவது:- சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன . சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதலில் விரைவு பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் கோவிட் -19 சோதனைக் கருவிகள் ஆரம்பகால நோயறிதலுக்காக அல்ல, கண்காணிப்பு பணிக்காகவே பயன்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story