கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் போராட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா, தனது கோரமுகத்தை இந்தியாவிலும் காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் போராட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ இனம், மதம், நிறம் ,சாதி, மொழி, எல்லைகள் ஆகியவற்றை பார்த்து கொரோனா தாக்காது.
ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துடன் கொரோனாவை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். கொரோனா தடுப்பில் இந்தியாவின் யோசனைகள் உலகளவில் முக்கியத்துவம் பெற்று பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story