கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - பினராயி விஜயன்


கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 20 April 2020 3:40 PM GMT (Updated: 20 April 2020 3:40 PM GMT)

கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 5 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள். தற்போது வரை கேரளாவில் 408 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 114 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, 46,323 நபர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் 45,925 வீடுகளிலும், 398 மருத்துவமனைகளிலும் உள்ளனர். இதுவரை 19,756 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 19,074 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் பரிசோதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த செயல்முறை நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story