ஊரடங்கு காரணத்தால் தங்கம் இறக்குமதி 99 சதவீதம் சரிவடைந்தது
ஊரடங்கு காரணத்தால், கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
புதுடெல்லி,
உலக அளவில், தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 110 டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 99 சதவீதம் குறைந்துள்ளது. அந்த மாதத்தில் டாலர் மதிப்பில் தங்கம் இறக்குமதி 28 சதவீதம் சரிந்து (397 கோடி டாலரில் இருந்து) 284 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதே இதற்கு காரணம்.
Related Tags :
Next Story