ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 39 கோடி பேருக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி - மத்திய அரசு தகவல்


ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 39 கோடி பேருக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 4:45 AM IST (Updated: 7 May 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் கடந்த 5-ந் தேதி வரை 39 கோடி பேருக்கு ரூ.34 ஆயிரத்து 800 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையிலான நிதி உதவி திட்டத்தை கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக் கள், விவசாயிகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 5-ந் தேதி வரை 39 கோடி பேருக்கு ரூ.34 ஆயிரத்து 800 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில், பிரதம மந்திரி விவசாயிகள் நல திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 8 கோடியே 19 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 394 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 20 கோடியே 5 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.10 ஆயிரத்து 25 கோடி செலுத்தப்பட்டு இருக்கிறது. 5 கோடியே 57 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் இரண்டாவது தவணையாக ரூ.2,785 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 2 கோடியே 82 லட்சம் பேருக்கு ரூ.1,405 கோடியும், 2 கோடியே 20 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3,492 கோடியே 57 லட்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story