தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம் + "||" + Rahul Gandhi, P.Chidambaram condemns petrol and diesel tax hike

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம்

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம்
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் பொருளாதாரரீதியாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் விலையை குறைப்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பது நியாயமல்ல. இந்த வரிஉயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

துயரமான காலகட்டத்தில், மக்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமே தவிர, மக்களை நசுக்கவோ, பணம் பறிக்கவோ கூடாது. மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக மக்களிடமிருந்து பணம் பெறுவது மிகவும் குரூரமானது.

பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் கடன் வாங்க வேண்டும். அதை விடுத்து, பொருளாதாரம் முடங்கி இருக்கும்போது வரிச்சுமையை உயர்த்தக்கூடாது.

பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்போது புதிய வரிகள் விதிப்பதும், வரியை உயர்த்துவதும்தான் நியாயமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வரியை உயர்த்துவது மக்களை மேலும் வறுமையில் தள்ளும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; புதுச்சேரி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் மீதான வரிஉயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
3. ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனை குறைந்தது
கொரோனா வைரஸ் பாதிப்பால், ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனை சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு - தமிழக அரசு விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.