லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராஹிமுடன் கைகோர்த்து இந்தியாவில் தாக்குதல்களை நடத்த திட்டம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தொய்பா ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தாவூத் இப்ராஹிம் கைகோர்த்துள்ளதாகவும், தாவூத் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) தனது பண்ணை வீட்டில் காணப்பட்டதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ அமைப்பு அதிகாரிகளுடன் தாவூத் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் கொரோனா அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதில் முழு நாடும் கவனம் செலுத்துகின்ற நேரத்தில் ஐ.எஸ்.ஐ இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், திங்கள்கிழமை (மே 11) நடைபெறும் ரம்ஜானின் 17 வது நாளுக்காக காஷ்மீரில் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story