கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல, அது செயற்கையாக உருவாக்கபட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் இருந்துதான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நிதின் கட்காரி கூறும் போது, “ கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல. செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் இன்று பல நாடுகளை பாதித்துள்ளது.
கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது அதைத் தடுக்கும் மருந்து ஏதும் இல்லை. அது கிடைத்தால் மட்டுமே பிரச்னையில் இருந்து நாம் முழுமையாக வெளியே வர முடியும். விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
எனவே, நாம் கொரோனா வைரசுடன் வாழும் கலையை பழகிக்கொள்ள வேண்டும். உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். முகக்கவசங்களை அணிய வேண்டும். இதைத்தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை” என்றார்.
Related Tags :
Next Story