டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசம் பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை
டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசங்களை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பார்சல்களில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து இத்தகைய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 2,480 கிலோ அளவில் முக கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த பெட்டிகளை சோதனையிட்டதில், சுமார் 5 லட்சம் முக கவசங்கள், 57 லிட்டர் சானிடைசர், 952 பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story