காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் தெக்வார் செக்டார் அருகே நேற்று காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லையை நோக்கி வந்தனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு சிறிய ரக பீரங்கி மூலமும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் கடைசியாக கடந்த 9-ந் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு பிறகு தற்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதே மாவட்டத்தின் கஸ்பா மற்றும் சாபூர் எல்லைக்கட்டுப்பாடு கோடுகள் அருகே 2 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story