மத்தியபிரதேசம்: தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி


மத்தியபிரதேசம்: தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 18 May 2020 4:00 PM IST (Updated: 18 May 2020 4:00 PM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசம் குவாலியரில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள் 3 பேர் காயமடைந்தனர்.

குவாலியர்

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள் 3 பேர் காயமடைந்தனர்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள இந்தர்கஞ்ச் சந்தையில் ரோஷ்னி கர் சாலையில் உள்ள வளாகத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள பெயிண்ட் கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தில்  4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானதற்கு  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.

"இந்தர்கஞ்சில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதில் உயிர் இழப்பு பற்றி அறிந்து நான் மிகவும் வேதனையடைகிறேன். துயரத்தின் இந்த நேரத்தில் வெளியேறிய ஆத்மாக்களுக்கு அமைதியையும் குடும்பத்திற்கு பலத்தையும் அளிக்க நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன், ”என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.



Next Story