கொரோனா பாதிப்பு- அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலி


கொரோனா பாதிப்பு- அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலி
x
தினத்தந்தி 20 May 2020 7:45 AM IST (Updated: 20 May 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளனர்.

வாஷிங்டன்,

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. 

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533- ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1,570,583- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

Next Story