புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியீடு


புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 24 May 2020 2:00 AM IST (Updated: 24 May 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 16-ந்தேதி, டெல்லி வழியாக உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக 16 நிமிடம் ஓடும் ஆவணப்படம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதில், சுமார் 20 தொழிலாளர்களுடன் நடைபாதையில் அமர்ந்து ராகுல் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை பொறுமையாக கேட்பதுடன், அவர்கள் ஊருக்கு சென்றடைய உதவுவதாக உறுதி அளிக்கும் காட்சியும் உள்ளது.அதையடுத்து, அவர்களை வேன், கார்களில் ஏற்றி அனுப்புவதும், அவர்கள் சொந்த ஊருக்கு சென்றடைந்து ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பதும் இடம்பெற்றுள்ளது.

ஆவணப்படத்தின் இறுதியில், “13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500-ஐ வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும்” என்று ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கிறது.

Next Story