தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 130 people were newly infected in Karnataka to ensure Corona

கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,089 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 654 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது? - மந்திரி சுரேஷ்குமார் பதில்
கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது? என்பது பற்றி மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.
3. கர்நாடக மாநிலத்தில் இன்று 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகாவில் இன்று 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டது: மந்திரி ஜேசி மதுசாமி கவலை
கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அம்மாநில மந்திரி மதுசாமி தெரிவித்துள்ளார்.
5. கர்நாடகாவில் புதிதாக 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத் துறை தகவல்
கர்நாடகாவில் புதிதாக 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.