அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
புதுடெல்லி,
அம்பன் புயலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு பிரதமர் மோடி அறிவித்தபடி உடனடி நிவாரணமாக ரூ. 1,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. விரைவில், மேற்கு வங்க மாநிலத்தில் புயல் சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேபினட் செயலர் ராஜீவ் கவுபா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் அறிவித்த உடனடி நிவாரணத் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்தப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் மேற்கு வங்க மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்திருந்தார்.
Related Tags :
Next Story