தேசிய செய்திகள்

கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம் + "||" + Accident: 8 migrant workers injured while traveling from Kerala

கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்

கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்
கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
புவனேஸ்வரம், 

கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து 30 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத்துக்கு புறப்பட்டு சென்றது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் இருந்த தொழிலாளர்களில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்குள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேற்குவங்காள மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
3. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. கேரளாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.