தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு வயது குழந்தைக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முசாபர்நகர்,
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த குழந்தை முசாபர்நகர் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டது.
கைக்குழந்தை என்பதால் அந்த குழந்தையை வீட்டு தனிமைப்படுத்தலில் தாயுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவ அதிகாரிகள், அந்த குழந்தையையும், தாயையும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தினர்.
இது குறித்து மருத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த குழந்தையின் தாய்க்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும் கைக்குழந்தையை மட்டும் ஆஸ்பத்திரியில் தனியாக வைத்திருக்க முடியாது என்பதால், தாயையும் தனிமைப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story