கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்


கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2020 3:00 AM IST (Updated: 4 Jun 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச அரசுக்கு சொந்தமாக 3 விமானங்களும், 7 ஹெலிகாப்டர்களும் உள்ளன. கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட நிதிதேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மந்திரி நந்தகோபால் குப்தா தலைமையில் நடைபெற்ற சிவில் விமான போக்குவரத்து துறை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. மந்திரிசபையின் ஒப்புதலுக்காக இத்திட்டம் அனுப்பி வைக்கப்படும். இதன்படி, விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஏர் ஆம்புலன்சுகளாகவும், வேறு மாநிலங்களின் கவர்னர், முதல்-மந்திரி பயணத்துக்கும் வாடகைக்கு விடப்பட உள்ளன.

Next Story