மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் - நிதின் கட்காரி அறிவிப்பு
பிப்ரவரி மாதம் முதல் காலாவதி ஆன மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து காலாவதி ஆன மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்காமல் இருந்தால், அவை ஜூன் 30-ந் தேதிவரை செல்லும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், இந்த ஆவணங்கள் செல்லும் காலம் செப்டம்பர் 30-ந்தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று அறிவித்தார்.
மோட்டார் வாகனங்களின் அனைத்து வகையான பெர்மிட்கள், தகுதி சான்றிதழ், பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story