டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவுடன், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “ மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினேன். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக விவாதித்தோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் 4-வது பொது முடக்கத்துக்கு பின் வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story