குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு 8.13 மணிக்கு ரிக்டர் 5.5 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அகமதாபாத், பதான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.
தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரில் சரியாக 8.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story