இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி, ராகுல்காந்திதான்: பா.ஜனதா கடும் தாக்கு


இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி, ராகுல்காந்திதான்: பா.ஜனதா கடும் தாக்கு
x
தினத்தந்தி 19 Jun 2020 3:54 AM IST (Updated: 19 Jun 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி, ராகுல்காந்திதான் என்று பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது:-

சீன எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்கனவே 19-ந் தேதி (இன்று) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், ராகுல்காந்தி கொஞ்சமும் முதிர்ச்சி இன்றியும், பொறுப்பின்றியும் பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்து வருகிறார். இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி, ராகுல்காந்திதான். அவர் நிராயுதபாணிகளாக தனது வீரர்களை இந்தியா சாக விட்டு விட்டதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கிறார்.

கடந்த 1996-ம் ஆண்டு, தேவேகவுடா பிரதமராக இருந்தபோது, எல்லையில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-சீனா இடையே கையெழுத்தானது. எனவே, எதையும் படித்து புரிந்துகொண்டு பேசுங்கள். சொந்த நாட்டுக்கு எதிராக ஆத்திரத்தை கக்காதீர்கள்.

இவ்வாறு சம்பிட் பத்ரா கூறினார்.

Next Story