இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை-பிரதமர் மோடி


இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை-பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Jun 2020 5:23 PM GMT (Updated: 2020-06-19T22:53:14+05:30)

இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

லடாக் பகுதியில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி இன்று (19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதன்படி காணொலி காட்சி  முறையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.எல்லைக் கட்டுப்பாட்டுப்  பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.

இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். நமது படை வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்ய ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதேவேளையில், இறையாண்மையை காப்பதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார். 

Next Story