ராகுல் காந்தியை கடுமையாக சாடும் ராணுவ வீரரின் தந்தை - டுவிட்டரில் பகிர்ந்த அமித்ஷா


ராகுல் காந்தியை கடுமையாக சாடும் ராணுவ வீரரின் தந்தை -  டுவிட்டரில் பகிர்ந்த அமித்ஷா
x
தினத்தந்தி 20 Jun 2020 11:35 PM IST (Updated: 20 Jun 2020 11:35 PM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

புதுடெல்லி,

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை  காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில்,  ராணுவ வீரரின் தந்தை ஒருவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ள வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

அமித்ஷா பகிர்ந்த அந்த வீடியோவில்  முதியவர், இந்திய ராணுவம் வலிமைமிக்கது, சீனாவையும் இன்னும் பிற நாடுகளையும் வீழ்த்தும் ஆற்றல் பெற்றது. இதில், ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது. ராணுவத்தில் சேர்ந்து என் மகன் போராடினான், அவன் மீண்டும் போராடுவான். அவன் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பான அமித்ஷாவின் பதிவில், ஒரு துணிச்சலான ராணுவ வீரரின் தந்தை ராகுல் காந்திக்கு மிகத் தெளிவான செய்தியைத் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டிருக்கும் நேரத்தில், ராகுல் காந்தியும் அரசியலைத் தாண்டி, தேச நலனுக்காக ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று அந்த வீடியோவுடன் அமித் ஷா பதிவிட்டுள்ளார். 

Next Story