மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த பாஜக எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு

மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த பாஜக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த பா.ஜ., எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானது.
மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட எம்.எல்.ஏவும் வாக்களித்தார். இதையடுத்து, அவருடன் வாக்களித்த எம்.எல்.ஏக்கள் பலரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் 2-வது எம்.எல்.ஏ இவர் ஆவார். ஏற்கனவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க பாதுகாப்பு கவச உடை (PPE) அணிந்து வந்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story