"பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும்" - காங்கிரஸ் கட்சி


பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும் - காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 4 July 2020 3:03 AM GMT (Updated: 4 July 2020 3:03 AM GMT)

பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் லே பயணம், ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும், அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பதற்றம் நீடித்து வந்த பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்பே சென்று இருக்க வேண்டும் என் காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் ஊடுருவிய சீன துருப்புகள் அனைவரையும், அவர்களது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் அடியோடு விரட்டி அடிக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  அதேவேளையில், சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா? என்பது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விலக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, நேற்று சீனாவுடன் மோதல் ஏற்பட்ட லடாக் எல்லைப்பகுதிக்கு திடீர் பயணமாக சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது,  அவர் ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது” என்று பேசினார். மேலும்,  சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் காயம் அடைந்த நமது ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார். 

Next Story