மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. மராட்டியத்தில் இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது.
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,205 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று ஒரேநாளில் மேலும் நான்கு போலீசார்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,070 போலீசார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 4,071 போலீசார்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
Related Tags :
Next Story