சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை நிறுத்தம்
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்படுவதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதை காரணம் காட்டி சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்படுவதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை, மும்பை, டெல்லி, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு 6 ந் தேதி (நாளை) முதல் 19 ந் தேதி வரை, அல்லது மறு உத்தரவு வரும்வரை எந்த விமானமும் இயங்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு தினமும் 5 விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாட்டில் தற்போது கொரோனா பரவலில் சென்னை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட மேற்கண்ட 6 நகரங்களிலிருந்து கொல்கத்தாவுக்கு வரும் விமான பயணிகள் மூலமாகவே கொல்கத்தாவில் நோய்த்தொற்று அதிகம் பரவியதாக கூறப்படுகிறது. இதனாலேயே மத்திய விமான துறையின் ஒப்புதல் பெற்று கொல்கத்தா விமான நிலையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story