இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவர பட்டியலில், புதிதாக 24 ஆயிரத்து 879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,603 ஆகும்.
தமிழகத்தில் 3,756 பேரும், கர்நாடகாவில் 2,062 பேரும், டெல்லியில் 2,033 பேரும், தெலுங்கானாவில் 1,924 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,188 பேரும், ஆந்திராவில் 1,062 பேரும், மேற்குவங்காளத்தில் 986 பேரும், அசாமில் 814 பேரும், குஜராத்தில் 783 பேரும், அரியானாவில் 691 பேரும், ராஜஸ்தானில் 659 பேரும், பீகாரில் 619 பேரும், ஒடிசாவில் 527 பேரும், மத்தியபிரதேசத்தில் 409 பேரும், ஜம்மு காஷ்மீரில் 330 பேரும், கேரளாவில் 301 பேரும், பஞ்சாபில் 158 பேரும், கோவாவில் 136 பேரும், சத்தீஸ்காரில் 110 பேரும், ஜார்கண்டில் 100 பேரும், புதுச்சேரியில் 78 பேரும், திரிபுராவில் 57 பேரும், நாகாலாந்தில் 32 பேரும், உத்தரகாண்டில் 28 பேரும், சண்டிகாரில் 19 பேரும், இமாசலபிரதேசத்தில் 18 பேரும், அருணாசலபிரதேசத்தில் 11 பேரும், சிக்கிமில் 8 பேரும், மணிப்பூரில் 5 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 3 பேரும், அந்தமான் நிகோபார் தீவில் 2 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சேர்த்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மராட்டியத்தில் 198 பேர், தமிழகத்தில் 64 பேர், கர்நாடகாவில் 54 பேர், டெல்லியில் 48 பேர், மேற்குவங்காளத்தில் 23 பேர், உத்தரபிரதேசத்தில் 18 பேர், குஜராத்தில் 16 பேர், ஆந்திராவில் 12 பேர், தெலுங்கானாவில் 11 பேர், ராஜஸ்தானில் 10 பேர், மத்தியபிரதேசத்தில் 7 பேர், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் தலா 6 பேர், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் அரியானாவில் தலா 3 பேர், அசாமில் 2 பேர் என மொத்தம் 487 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story