டெல்லியில் மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 July 2020 11:11 PM IST (Updated: 10 July 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் டெல்லி முழுவதும் 2,468 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,694 ஆக அதிகரித்துள்ள நிலையில் 21,146 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story