தேசிய செய்திகள்

அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி + "||" + Amitabh Bachchan, son Abhishek test positive for Covid-19

அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி
அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில், “எனது தந்தை, நான் இருவரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம். லேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அனைவரையும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. அமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்: உருக்கமாய் ஒரு பதிவு
நடிகர் அமிதாப்பச்சன் தனது கொரோனா அனுபவங்களை உருக்கமாய் பதிவு செய்துள்ளார்.
2. “விதியை யாராலும் வெல்ல முடியாது” அமிதாப்பச்சன்
“விதியை யாராலும் வெல்ல முடியாது” என்று நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.