36 வருட மோசடி; பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம் விதிப்பு


36 வருட மோசடி; பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 8:08 PM IST (Updated: 13 July 2020 8:08 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அரசு நிலத்தில் குத்தகை ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதற்காக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் சன்சாத் மார்க் பகுதியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  அரசு நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதில் ஒப்பந்த விதிகளை நிறுவனம் மீறியுள்ளது என மத்திய வீட்டு வசதி அமைச்சகம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதனால், அரசுக்கு ரூ.84.48 கோடி அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளது.  இதனை வரும் ஆகஸ்டு 7ந்தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் தவறினால், மொத்த தொகையில் 10 சதவீத வட்டியும் சேர்த்து கட்ட வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு அரசிடம் இருந்து நிலம் குத்தகைக்கு பெறப்பட்டு உள்ளது.  பின்னர் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு அதன் கீழ்தளத்தில் நிறுவனம் செயல்பட்டு உள்ளது.  நில ஒதுக்கீடு விதிகளை அந்நிறுவனம் தவறாக பயன்படுத்தி உள்ளது என்றும் கடந்த 36 வருடங்களாக நிலத்திற்கான வாடகை கட்டணம் அரசுக்கு செலுத்தப்படவில்லை என்றும் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  இதுபற்றிய நோட்டீஸ் ஒன்றை பெற்றுள்ள அந்நிறுவனம் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Next Story