திருச்சி வழியே செல்லும் 2 சிறப்பு ரெயில்கள் வரும் 31ந்தேதி வரை ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருச்சி வழியே செல்லும் 2 சிறப்பு ரெயில்கள் வரும் 31ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பயணிகள், எக்ஸ்பிரஸ், மெட்ரோ ரெயில் என அனைத்து வகையான ரெயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் நலனுக்காக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தவிர்த்து, மதுரை-விழுப்புரம்-மதுரை சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) மற்றும் திருச்சி-நாகர்கோவில்-திருச்சி சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) ஆகிய இரு சிறப்பு ரெயில்களும், கடந்த ஜூன் 1ந்தேதியில் இருந்து திருச்சி வழியே இயக்கப்பட்டன.
கொரோனா பாதிப்புகளை தவிர்ப்பதற்காக இந்த ரெயில்களில் பயணிக்க ஆன்லைன் வழியே பதிவு செய்து கொள்ளும்படியும் கேட்டு கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுரை-விழுப்புரம்-மதுரை சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) மற்றும் திருச்சி-நாகர்கோவில்-திருச்சி சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (தினமும்) ஆகிய இரு ரெயில்களின் சேவை வரும் 31ந்தேதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story