கொரோனா பாதிப்பு; டெல்லியில் நாளை மத்திய உள்விவகார நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனை கூட்டம்


கொரோனா பாதிப்பு; டெல்லியில் நாளை மத்திய உள்விவகார நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 July 2020 8:34 PM IST (Updated: 14 July 2020 8:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசிக்க டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாளை கூடுகிறது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, பொருளாதார தேக்கமும் ஏற்பட்டு உள்ளது.  மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு முழு அளவில் முயற்சி எடுத்து வருகிறது.  இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

நாட்டில் மராட்டியம் அதிக பாதிப்புகளை கொண்டுள்ளது.  தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.  எனினும், கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாளை கூடுகிறது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், அரசு அறிவியல் ஆலோசகர்கள், அறிவியல் நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Next Story