மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
கொரோனா வைரசின் கோரப்பிடியில் மராட்டிய மாநிலம் சிக்கி தவித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது. மராட்டியத்தில் இன்று புதிதாக 6741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மீண்டவர்களின் எண்ணிக்கை 4,500 ஆக உள்ளது. அதேபோல், மராட்டியத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,67,665 ஆக உள்ளது. இதில் 1,49,007 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் இதுவரை 10,695 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 1,07,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story