கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்துள்ளது - உத்தவ் தாக்கரே பெருமிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்து உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டுமொத்த உலகின் கவனமும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையை நோக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுபடுத்தி உள்ளோம். உலக சுகாதார அமைப்பும் இதுகுறித்து பேசி உள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூட பாராட்டி உள்ளது. எனவே தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்து உள்ளது.
ஆனால் நமது பரீட்சை இன்னும் முடியவில்லை. எல்லா அரசு துறைகளும் கொரோனா பாதிப்பை குறைப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்துவிட கூடாது. நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துவிடும். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பாராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் தங்களது உடல்நலனை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதேபோல கொரோனா மட்டுமின்றி மழைக்கால நோய்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story