நூற்றாண்டு விழாவையொட்டி நரசிம்மராவுக்கு சோனியா, ராகுல்காந்தி புகழாரம்
நூற்றாண்டு விழாவையொட்டி நரசிம்மராவுக்கு சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் புகழாரம் சூட்டினர்.
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி, ஓராண்டு காலம் கொண்டாடுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நரசிம்மராவ், பெரிதும் மதிக்கப்படும் தேசிய, சர்வதேச பிரபலம் ஆவார். அவரது அரசால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார உருமாற்றத்துக்கு முக்கிய பங்கு வகித்தன. அவரது துணிச்சலான தலைமையால் பல சவால்களை நாடு முறியடித்தது. அவரது சாதனைகள் மற்றும் பங்களிப்பால் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், தன்னுடைய நிதி மந்திரி மன்மோகன்சிங்குடன் சேர்ந்து, தாராளமய கொள்கையை அமல்படுத்தினார். நவீன இந்தியாவை வடிவமைப்பதில் தனது வாழ்நாளெல்லாம் பாடுபட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story