கொரோனாவை கையாளும் முறை: உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு; முதல்-மந்திரிக்கு கடிதம்


கொரோனாவை கையாளும் முறை: உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு; முதல்-மந்திரிக்கு கடிதம்
x
தினத்தந்தி 26 July 2020 1:00 AM IST (Updated: 26 July 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியான சூழலை சரியாக கையாளவில்லை என மாநில அரசு மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தின் அனைத்து பெருநகரங்களும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கிராமங்கள் கூட தற்போது தொற்று பரவும் மையங்களாக மாறி வருகின்றன. மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. சில பகுதிகளில் நிலைமை மிகவும் மோகமாக உள்ளது. இதனால் மக்கள் கொரோனா பரிசோதனைக்காக வீட்டைவிட்டு வெளியே வரவில்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது அரசின் மிகப்பெரிய தோல்வி எனவும், பரிசோதனை செய்யாவிட்டால் கொரோனா இருக்காது என மாநில அரசு நம்புவதாகவும் கூறியுள்ள பிரியங்கா, பரிசோதனை எண்ணிக்கையை வெளிப்படையாக அதிகரிக்காவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முற்றுப்பெறாது எனவும், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும் எனவும் எச்சரித்து உள்ளார்.

Next Story