ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 கோடி - மத்திய நிதியமைச்சகம் தகவல்


ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 கோடி - மத்திய நிதியமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2020 4:36 PM GMT (Updated: 1 Aug 2020 4:36 PM GMT)

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி தொகை ரூ. 87,422 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி தொகை ரூ. 87,422 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி 2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 20,324 கோடி ரூபாய் உட்பட) மற்றும் செஸ் வரி 7,265 கோடி ரூபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 7 807 கோடி ரூபாய் உட்பட). என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு, 23,320 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு, 18,838 கோடி ரூபாயும் வழக்கமான தீர்வாக அரசாங்கம் செலுத்தியுள்ளது. 2020 ஜூலை மாதத்தில் வழக்கமான தீர்வுக்குப் பிறகு மத்திய அரசும், மாநில அரசுகளும் சம்பாதித்த மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு, 39,467 கோடி ரூபாய் மற்றும் எஸ்ஜிஎஸ்டிக்கு 40,256 கோடி ரூபாய்.

இந்த மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 86 சதவீதமாகும். இந்த மாதத்தில், பொருள்கள் இறக்குமதியின் வருவாய் 84 சதவீதமாகவும், உள்நாட்டுப் பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த வழியாகக் கிடைத்த வருவாயில் 96 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மாதத்திற்கான வருவாய், நடப்பு மாதத்தை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story