ரக்‌ஷாபந்தன் பண்டிகைக்கு ஜனாதிபதி வாழ்த்து


ரக்‌ஷாபந்தன் பண்டிகைக்கு ஜனாதிபதி வாழ்த்து
x
தினத்தந்தி 3 Aug 2020 2:36 AM IST (Updated: 3 Aug 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

ரக்‌ஷாபந்தன் பண்டிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று (3-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக கருதுவோருக்கும் அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது வழக்கம்.

வட இந்தியாவில் மட்டுமின்றி தென்இந்தியாவிலும் இப்போது பிரபலம் அடைந்துவரும் இந்த பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்” என கூறி உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த பண்டிகை அன்பு மற்றும் பாசத்தினால் சகோதர, சகோதரிகளை ஒன்றிணைக்க மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என கூறி உள்ளார்.
1 More update

Next Story