அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைப்பகுதி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி
கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களின் அணைகள் முழுவதுமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைத்தொடர்ச்சி மாவட்டங்களில் மிக அதிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கொங்கன், கோவா, மும்பை, மத்திய மராட்டியம், மத்தியப்பிரதேசத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் 60 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story