இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் - பிரதமர் மோடி


இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Aug 2020 10:39 AM GMT (Updated: 5 Aug 2020 10:39 AM GMT)

ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.

அயோத்தி

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.  

விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. ராமர் கோவில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல். கோடான கோடி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

நமது கலாசாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோவில் விளங்கும்.நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோவில் இருக்கும், இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டது மன திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோவில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர்.இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது .ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல காலமாக ஒரு டெண்டில் தங்கி இருந்த கடவுள் ராமருக்கு ஒரு பெரிய கோயில் கட்டுகிறோம். பல நூற்றாண்டுகளாக கோவில் கட்டுவதும், இடிப்பதுமாக இருந்த சுழற்சி ராமஜென்ம பூமியில் இன்றுடன் முடிகிறது.

தியாகம், விடாமுயற்சியின் வெளிப்பாடாக ராமர் கோவில் அமைய உள்ளது.ராமர் கோவில் நமது கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக திகழும்.நம்பிக்கை, அன்பு மற்றும் அர்ப்பணிப்புகளை நமக்கு உணர்த்துவதாக ராமர் கோவில் இருக்கும்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவிலும் உதாரணமாக திகழும்.

ராமர் கோவில் அமைய உள்ள பிரதேசத்தின் பொருளாதாரம் மேம்படும்.அயோத்தி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும்.மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ராமர் கோவில் அமையும்

ராமர் கோவில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்றுகிறது. கம்போடியா, மலேசிய மொழிகளில் கூட ராமாயணம் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் ராமர் வழிபடப்பட்டு வருகிறார்.தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.ராம ராஜ்ஜியத்தில் வேறுபாடுகள் இல்லை, ஏழ்மை இல்லை.அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவோம், அது சுயசார்பு பாரதமாக அமையும் என கூறினார்.

Next Story