மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்


மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்
x
தினத்தந்தி 7 Aug 2020 8:47 AM IST (Updated: 7 Aug 2020 8:47 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு உள்ள பதவியாகும். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில் தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருக்கும் ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் இன்று முடிவதையடுத்து, அந்தப் பதவிக்கு கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொருளதார விவகாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், ‘தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்முவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் அந்த பதவி ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபின், முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். துணை நிலை ஆளுநராக பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள் , நேற்று முர்மு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 More update

Next Story