நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன


நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன
x
தினத்தந்தி 7 Aug 2020 4:25 AM GMT (Updated: 7 Aug 2020 4:25 AM GMT)

நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 19.64 லட்சம் கடந்துள்ளது.  56,282  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்திருந்தது.  இந்நிலையில், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் இதுவரை 2 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 134 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடந்துள்ளன.  நேற்று ஒரு நாளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 783 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Next Story