எல்லையை கண்காணிக்க 6 செயற்கை கோள்கள் வேண்டும் - இந்திய பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை


எல்லையை கண்காணிக்க 6 செயற்கை கோள்கள் வேண்டும் - இந்திய பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை
x

எல்லையில் சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க திறம்பட்ட 6 செயற்கை கோள்கள் வேண்டும் என இந்திய பாதுகாப்பு அமைப்பு கோரியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லையோரங்களில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது.

இதுவரை 40 ஆயிரம் வீரர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றை குவித்துள்ளன. இதை கண்காணித்து வரும் இந்தியா தரப்பு பாதுகாப்பு அமைப்பு, அதிக குவிதிறனுடன் கேமராவுடன் கூடிறய 6 செயற்கை கோள்கள் வேண்டும் என கோரியுள்ளது. இதன் மூலம், இந்திய எல்லையோரத்தில் என்ன நடக்கிறது என்பதை நெருக்கமாக கண்காணிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.   

Next Story