முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது; ரோஜா, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தேசபக்தி திரைப்படங்கள் ஒளிபரப்பு


முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது; ரோஜா, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தேசபக்தி திரைப்படங்கள் ஒளிபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 10:18 AM IST (Updated: 7 Aug 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், இன்று தொடங்கியுள்ள ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழாவில் பல்வேறு தேசபக்தி சார்ந்த திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

புதுடெல்லி,

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  நடைபெறும் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையிலும், இந்திய சுதந்தர வரலாற்றை விளக்கும் வகையிலும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவையொட்டி நாள்தோறும் www.cinemasofindia.com  என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தேசபக்தி படங்கள்  ஒளிபரப்பபடும். சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம், தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட 43 திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்பபட உள்ளன.
1 More update

Next Story