இந்தியாவில் ஒரே நாளில் 62,538 பாதிப்புகள்; புதிய உச்சம் தொட்ட கொரோனா + "||" + 62,538 vulnerabilities in a single day in India; Corona touching new height
இந்தியாவில் ஒரே நாளில் 62,538 பாதிப்புகள்; புதிய உச்சம் தொட்ட கொரோனா
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனாவால் ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 19.64 லட்சம் கடந்திருந்தது. நேற்று ஒரே நாளில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் குணமடைந்து உள்ளனர். 41,585 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டில் கடந்த புதன்கிழமை கொரோனா பாதிப்புகள் 19 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குள் ஒரு லட்சம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.