மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு


மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 10:52 AM GMT (Updated: 7 Aug 2020 10:52 AM GMT)

கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, இடுக்கி ராஜ மலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய  16 பேர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். தமிழக தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இந்த பகுதியில் 80க்கும் மேற்பட்டோர் வசித்து வந்த நிலையில், மண்சரிவில் 20 பேர் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மண்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 57 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story