இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,489-பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,489-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 Aug 2020 4:13 AM GMT (Updated: 16 Aug 2020 4:13 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,489-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,489-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 944- பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  25,89,682- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49,980-  ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன்  6,77,444- பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 18,62,258 -பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை  கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய  2,93,09,703 -சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும்  7,46,608 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 

உலக அளவில் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அமெரிக்காவில் வெறும் 23 நாட்களில்  50 ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டது.  பிரேசிலில் 95 நாட்களிலும் மெக்சிகோவில் 141 நாட்களிலும் ஏற்பட்டது. இந்தியாவில்  156 நாட்கள் ஆகியுள்ளன


Next Story