ஜம்மு - காஷ்மீரில் அதிவேக 4ஜி இணைய சேவை


ஜம்மு - காஷ்மீரில் அதிவேக 4ஜி இணைய சேவை
x
தினத்தந்தி 17 Aug 2020 10:37 AM IST (Updated: 17 Aug 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு - காஷ்மீரில் 2 மாவட்டங்களுக்கு அதிவேக 4 ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீரின் காந்தர்பல், உத்தம்பூர் மாவட்டங்களில் 4-ஜி அதிவேக இணைய சேவை மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மருத்துவ சேவைக்காவும், கல்விக்காகவும் 4ஜி இணைய சேவையை  வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து முடிவெடுக்க உயர்நிலை குழு அமைக்க உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தவில்லை என கூறி 'ஃபவுன்டேஷன் ஃபார் மீடியா ப்ரபஷனல்' என்ற  அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு  தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரில் ஒரு மாவட்டத்திலும் 4ஜி இணைய சேவை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம், ஜம்முவில் உள்ள காந்தர்பால் மாவட்டத்தில் மட்டும் நேற்று இரவு முதல் 4ஜி சேவை மீண்டும் வழங்கப்பட்டது.

இந்த 4ஜி இணைப்பு வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை பரிசோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் எந்நேரமும் உத்தரவு திரும்பப் பெறப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்படுவதற்கு முதல்நாள் இரவு மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஜனவரி 25-ம் தேதி 2ஜி இன்டர்நெட் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது.

ஆனால் ஓர் ஆண்டுக்குப்பின் இப்போது இரு மாவட்டங்களுக்கும் மட்டும் 4ஜி அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9மணி முதல் 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story